;
Athirady Tamil News

பிரித்தானியாவில் weight-loss ஊசியால் ஏற்பட்ட முதல் மரணம்

0

பிரித்தானியாவில் முதல் முறையாக ஒரு நபரின் மரணம் எடை குறைப்பு (weight-loss) மருந்தை உட்கொண்டதோடு தொடர்புடையதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

58 வயதான செவிலியர் சூசன் மெக்கோவன் (Susan McGowan), செப்டம்பர் 4 அன்று இரண்டு குறைந்த அளவிலான டிரிஜெபடைடு மருந்து (tirzepatide) ஊசியை போட்டுக்கொண்ட சில நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்ததாக் அறிக்கைகள் தெறிவிக்கின்றன.

சூசனின் இறப்புச் சான்றிதழில், பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு, செப்டிக் ஷாக் மற்றும் கணைய அழற்சி ஆகியவற்றுடன் அவரது மரணத்திற்கு ஒரு பங்களிப்பு காரணியாக டைர்செபடைட் மருந்து பட்டியலிடப்பட்டுள்ளது.

சூசன், ஒன்லைன் மருந்தகத்தின் மூலம் இந்த மருந்தை வாங்கியுள்ளார்.

இரண்டாவது ஊசி போட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்ற அவர், சிகிச்சை பலனின்றி, அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து கோமாவிற்கு தள்ளப்பட்டார்.

டிரிஜெபடைடு மருந்து பிரித்தானியாவில் 150 முதல் 200 பவுண்டுகள் வரை விற்கப்படுகிறது. இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு நீண்ட நேரம் பசிக்காமல், வயிறு நிரம்பியிருப்பதைப் பல உணர வைப்பதன் மூலம் செயல்படுகிறது.

Mounjaro என சந்தைப்படுத்தப்பட்ட டைர்செபடைடு மருந்துக்கு 208 பேர் 31 கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்துள்ளதாக NHS தரவு காட்டுகிறது.

60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இந்த மருந்தை உட்கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 முதல் பிரித்தானியாவில் எடை இழப்புக்கு இப்போது பயன்படுத்தப்படும் மருந்துகளுடன் 23 இறப்புகள் இணைக்கப்பட்டுள்ளன – ஆனால் ஒரு மரணம் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவது இதுவே முதல் முறை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.