;
Athirady Tamil News

ஜேர்மனிக்கு புதிய நிதி அமைச்சரை நியமித்த சேன்சலர்., சொந்த கட்சியின் உள்ளேயே பரபரப்பு

0

ஜேர்மன் அரசாங்கத்தில் புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz), நிதியமைச்சராக இருந்த சுதந்திர ஜனநாயக கட்சியை (FDP) சேர்ந்த கிறிஸ்டியன் லிண்ட்னரை பதவிநீக்கம் செய்தார்.

கடந்த சில வாரங்களாகவே நிதி மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து கூட்டணி கட்சிகளிடையே பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதன் பின்னணியில், சேன்சலர் ஷோல்ஸ் நிதி அமைச்சராக அவரின் நெருக்கமான ஆலோசகரான யோர்க் குக்கீஸை (Joerg Kukies) நியமித்துள்ளார்.

ஆனால் இந்த முடிவு ஷோல்ஸின் SPD கட்சியின் உள்ளேயே பரபரப்பை ஏற்படுத்தியது.

யார் இந்த Joerg Kukies?

56 வயதான யோர்க் குக்கீஸ், ஒரு முன்னாள் முதலீட்டு வங்கி ஆலோசகர் மற்றும் நிதி வல்லுநர் ஆவார்.

2018ல், Angela Merkel-ன் ஆட்சியில் ஷோல்ஸ் நிதி அமைச்சராக இருந்தபோது, குக்கீஸ் அரசியலுக்குள் நுழைந்தார்.

குக்கீஸ், ஹார்வர்டில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 17 ஆண்டுகள் முதலீட்டு வங்கியாளராக பணியாற்றிய அவர், Goldman Sachs நிறுவனத்தில் பிராந்திய தலைமை பொறுப்பில் இருந்தார்.

COVID-19 காலத்தில் அவர் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான நிதியத்தின் பொறுப்பாளராக இருந்துள்ளார். அதன் மூலம் தொழில் நிறுவனங்களின் நிலைத்தன்மையை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை செயல்படுத்தியவர்.

அதன் பிறகு, Lufthansa விமான நிறுவனத்தின் தற்காலிக அரசரீதியிலான தேசியமாக்கலுக்கான முக்கிய வழக்குரைஞராகவும் இருந்தார்.

Wirecard எனும் பிரபல நிறுவனத்தின் நெருக்கடியின் போது குக்கீஸின் புகழ் பாதிக்கப்பட்டது.

லிண்ட்னரின் FDP கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், ஷோல்ஸ் அவரது SPD மற்றும் Greens கட்சியினரை உள்ளடக்கிய ஒரு சிறுபான்மை கூட்டணியின் தலைவராக அடுத்த ஆண்டு வரையில் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நம்புகிறார்.

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாதது நிதியமைச்சராக குக்கிஸின் வாய்ப்புகளை மட்டுப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.