ஜேர்மனியில் திடீர் தேர்தல் வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம் கூறிய காரணம்
ஜேர்மனியில் வாக்குசீட்டுக்கான பேப்பர் இல்லாததால் முன்கூட்டிய தேர்தல்கள் சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
SPD, FDP மற்றும் Greens கட்சிகளின் கூட்டணி உடைந்ததால், சேன்சலரான ஓலஃப் ஷொல்ஸ் (Olaf Scholz) தமைலையலான அரசாங்கம் இந்த வாரம் வீழ்ச்சியடைந்தது.
இதையடுத்து, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் தேர்தல் நடத்த திட்டமிடபட்டது. ஆனால், முன்கூட்டிய தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்திற்கு ஓலஃப் ஷொல்ஸ் தள்ளப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் திடீர் தேர்தல் நடத்த முடியும் என கூறப்பட்டாலும், வாக்குச்சீட்டுகளுக்கான காகிதப் பற்றாக்குறை ஒரு பெரும் சவாலாக இருக்கலாம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணி காட்சிகள் உடைந்த பின், ஜனவரி அல்லது மார்ச் மாதங்களில் தேர்தல் நடத்த ஒலாஃப் சோல்ஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால், தேர்தல் ஆணையத் தலைவர் ரூத் பிராண்ட், காகிதம் மற்றும் அச்சிடுதல் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் தேர்தல் நடத்தும் போது திடீர் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
சிறந்த தரமான தேர்தலை நடத்த முடியாமல், ஜேர்மனி சர்வதேச அளவில் பின்தங்கியதாக காணப்படக்கூடும் என சில எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். அதேவேளை, ஜேர்மனியின் மிகப்பாரிய பில்ட் நாளிதழும் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையில், ஜனவரி அல்லது மார்ச் மாதங்களில் தேர்தல் நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசிக்க உள்ளனர்.