அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இல்லை: ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து!
கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியா-கனடா உறவில் விரிசல்
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு முன்வைத்த பிறகு இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இருநாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த விவகாரம் இருநாடுகளுக்கு இடையே பரபரப்பை அதிகரிக்க செய்தது.
இந்து கோயில் தாக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதே சமயம் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவும் இந்து கோயில் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து
இந்த நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது, கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இல்லை என்று தெரிவித்தார்.
அதில், கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர், அதற்காக இங்குள்ள சீக்கியர்கள் அவர்கள் அனைவரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்பது இல்லை.
அதேபோல் இங்கு இந்தியாவின் மோடி அரசுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர், அதற்காக கனடாவில் உள்ள அனைத்து இந்துகளையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டு பேசினார்.