திடீரென 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு – அதிர்ச்சியில் கிருஷ்ணகிரி மக்கள்
கிருஷ்ணகிரியில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சந்தூர் போன்ற பகுதிகளில் இன்று (09.11.2024) மதியம் 1:30 மணியளவில் திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் அந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்ப்பு ஏற்பட்டது.
நில அதிர்வு
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக போச்சம்பள்ளி அருகே உள்ள பெத்தம்பட்டி என்ற கிராமத்தில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசான நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் நில அதிர்வை உணர்ந்ததால் மக்கள் அச்சத்துடனே காணப்படுகின்றனர்.