;
Athirady Tamil News

யாழில் இருந்து புதிய முகங்களே நாடாளுமன்றம் செல்ல வேண்டும்

0

தமிழர்கள் பழைய முகங்களை தவிர்த்து இளம் புதிய முகங்கள் ஆறு பேரை யாழில் இருந்து நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என பிரபல தொழிலதிபர் விண்ணன் கோரிக்கை முன்வைத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்று தரப் போகிறோம் என கூறி வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக் கட்சிகள் தமது சுகபோக வாழ்க்கையை அனுபவித்ததே வரலாறு.

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்காக போராடுவோம் எனக் கூறியவர்கள் தமிழ் மக்களை அடகு வைத்து பணப்பெட்டிகளை பெற்றமையை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியவர்களுக்கு பெட்டிகளில் பணம் கைமாறப்பட்டுள்ளமை வெளியாகி உள்ளது.

தமிழ் பொது வேட்பாளரின் பொது சின்னமாக சங்கு சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் சின்னத்தை அபகரித்து கட்சிகளின் சின்னமாக மாற்றி விட்டார்கள்

இம்முறை தமிழ் கட்சிகள் பல துண்டுகளாக பிரிந்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தமிழ் மக்களின் நலனை சிந்திக்காமல் எப்படியாவது மீண்டும் பாராளுமன்றம் சென்று விட வேண்டும் எனற நினைப்பில் கட்சி தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

யாழ் தேர்தல் தொகுதியை பொறுத்தவரையில் திறமையான இளைஞர் யுவதிகள் இம்முறை பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள்.எ அவர்களை இம்முறை பாராளுமன்ற செல்ல அனுமதிக்க கூடாது.

இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்களுக்கு மேல் கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை தமிழ் மக்கள் உணர்வார்கள்.

ஆகவே தெற்கில் ஏற்பட்ட மாற்றத்தை போன்று வடக்கிலும் தமிழ் மக்கள் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அணி திரள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.