;
Athirady Tamil News

உக்ரைனுக்கு கடும் அழுத்தமளிக்கும் ட்ரம்ப் வட்டாரம்: ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு

0

உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை கைவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்பின் ஆலோசகர் ஒருவர் அழுத்தமளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெலென்ஸ்கிக்கு நெருக்கடி
ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலப்பரப்பில் ஒரு அடி கூட விட்டுத்தர முடியாது என கூறி வந்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு இது கடும் பின்னடைவு மட்டுமின்றி நெருக்கடியாகவும் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் இனி நாட்டில் அமைதி திரும்பும் வழிகளை ஆலோசிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப் ஆலோசகர் Bryan Lanza, ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலப்பரப்பு தொடர்பில் தற்போது அடம்பிடிப்பது பாதகமாக அமையும் என்றார்.

கிரிமியா பிராந்தியத்தை மீட்டெடுத்தால் தான் உக்ரைன் மக்கள் நிம்மதி அடைவார்கள் என ஜெலென்ஸ்கி தெரிவித்தால், அமைதி திரும்பும் முனைப்பில் அவர் இல்லை என்பதை புரிந்துகொள்ளலாம் என Bryan Lanza தெரிவித்துள்ளார்.

கிரிமியா பிராந்தியம் இனி உக்ரைனுக்கு சொந்தமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், Bryan Lanza வெளியிட்டுள்ள கருத்து ட்ரம்பின் கருத்தல்ல என்றே அவரது செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014 ல் அதிரடி தாக்குதலை தொடுத்து ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய ரஷ்யா உக்ரைனின் கிழக்கில் பெரும்பகுதி நிலப்பரப்பை கைப்பற்றியுள்ளது.

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே தமது முன்னுரிமைகளில் ஒன்று என ட்ரம்ப் கூறி வருவதுடன், உக்ரைனுக்கு இராணுவ உதவி என பெருந்தொகை அளிப்பதை நிறுத்த வேண்டும் என்பதே ட்ரம்பின் திட்டமாகவும் கூறப்படுகிறது.

ஆனால், உக்ரைன் போரை அவர் எவ்வாறு நிறுத்தப் போகிறார் என்பது தொடர்பான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. உக்ரைனின் கிழக்கில் பெரும்பகுதி நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது தொடர்பில் கருத்தேதும் தெரிவிக்காத Bryan Lanza, கிரிமியா குறித்து மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய முன்னுரிமை

ஆனால், கிரிமியா உக்ரைன் வசம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே அமைதி ஏற்படும், இந்த போரும் முடிவுக்கு வரும் என்று ஜெலென்ஸ்கி கூறி வருகிறார். இதுவரை அமெரிக்க ஆயுத உதவிகள் மட்டுமே உக்ரைன் கோரி வந்துள்ளதுடன், ஒருபோதும் அமெரிக்க இராணுவம் களமிறங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததில்லை.

உக்ரைன் மக்கள் மீது பெரும் மரியாதை இருப்பதாக குறிப்பிட்டுள்ள Bryan Lanza, அமெரிக்காவின் தற்போதைய முன்னுரிமை என்பது உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும், போர் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜெலென்ஸ்கியின் ஆலோசகர், புடின் போர் வேண்டும் என்று விரும்பும் நிலையில், லான்சாவின் கருத்துக்கள் உக்ரைன் மீது அமைதிக்கான அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றார்.

2022 முதலே உக்ரைன் போர் நிறுத்தப்பட வேண்டும், அமைதி திரும்ப வேண்டும் என கோரிக்கை வைத்து வந்துள்ளது. அமைதி தேவை என்பதையும், அமைதி நம்பகமானதாக இருக்க வேண்டும் என்பதையும் ரஷ்யா முன்வைக்க வேண்டும். ஏன் என்றால், உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா மட்டுமே என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.