இலங்கையில் குவிக்கப்பட்டுள்ள 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!
நாட்டில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் நாட்களில் வருகை தரவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க மேலும் 08 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.
இதேவேளை, தேர்தல் பிரசார காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது மிகக் குறைவாகவே காணப்படுவதாக தேர்தல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.