;
Athirady Tamil News

காலியில் ரயிலுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த பெண்!

0

காலியில் உள்ள ஹிக்கடுவ, அமரசேன மாவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பெண்ணொருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (09-11-2024) இடம்பெற்றுள்ளது.

காலி திசையில் இருந்து அளுத்கம திசை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த பெண் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் வல்பிட்டிமுல்ல, தெவலபொல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.