;
Athirady Tamil News

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தையிலிருந்து விலகிய கட்டார்

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயற்பட்டுவந்த கட்டார்(Qatar) குறித்த பணியை இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் மத்தியஸ்த பணியை தொடரவுள்ளதாக கட்டார் குறிப்பிட்டுள்ளது.

கட்டாரில் ஹமாஸ் பிரதிநிதிகள் இருப்பதை வொஷிங்டன் இனி ஏற்காது என்று சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து, காசாவில் போரை நிறுத்துவதற்கான புதிய திட்டங்களை பாலஸ்தீனிய குழு நிராகரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

இதேவேளை, லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் நடந்த தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்போது, மீட்கப்பட்ட உடல் பாகங்கள் அடையாளம் காண, மரபணு(DNA) சோதனைக்கு உட்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் அமைப்பு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்
இதற்கு பதிலடி தரவும், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை முடக்கவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், லெபனானில் கடந்த ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3,136 பேர் கொல்லப்பட்டதுடன் 13,979 பேர் காயம் அடைந்துள்ளனர் .

அத்துடன், உயிரிழந்தவர்களில் 619 பெண்கள் மற்றும் 194 குழந்தைகள் அடங்குவர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.