;
Athirady Tamil News

லெபனான் பிரதமர் படுகொலை : தேடப்பட்டு வந்த ஹிஸ்புல்லா தளபதியை சாய்த்தது இஸ்ரேல்

0

லெபனானின்(lebanon) முன்னாள் பிரதமரின் படுகொலைக்கு காரணமான ஹிஸ்புல்லா தளபதி ஒருவர் அண்மையில் இஸ்ரேலிய(israel) விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சவுதி ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

அல்-அரேபியா அவுட்லெட் சலீம் ஜமீல் அய்யாஷ் என்ற தீவிரவாதியே கொல்லப்பட்டதாகக் சவுதி ஊடகங்கள் தெரிவித்தன.

சிரிய நகரத்தில் ஹிஸ்புல்லாவின் கோட்டையில் தாக்குதல்
சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவலில் அவர் ஹிஸ்புல்லாஹ்வின் கோட்டையான சிரிய(syria) நகரமான அல்-குசைர் அருகே தாக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

வோஷிங்டனில் அவரது தலைக்கு $10 மில்லியன் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் ஹிஸ்புல்லாவின் யூனிட் 151 கொலைக் குழுவின் மூத்த உறுப்பினராக இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

2005 இல் பெய்ரூட்டில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னாள் லெபனான் பிரதமர் ரஃபிக் ஹரிரி கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா ஆதரவு நீதிமன்றத்தால் 2020 இல், அய்யாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒப்படைக்க மறுத்த ஹசன் நஸ்ரல்லா
செப்டம்பர் பிற்பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, அவரை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார், மேலும் மூன்று பிரதிவாதிகள் இறுதியில் விடுவிக்கப்பட்டனர்.

2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் லெபனான் அரசியல்வாதிகள் மீதான மற்ற மூன்று கொடிய தாக்குதல்கள் தொடர்பாக அய்யாஷ் தீர்ப்பாயத்தில் ஒரு தனி வழக்கை எதிர்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.