வங்கதேசத்தில் பதற்றம் : அரசுக்கு எதிராக களமிறங்கிய ஷேக் ஹசீனா கட்சியினர்
வங்கதேச அரசுக்கு எதிராக களமிறங்கிய ஷேக் ஹசீனா (Sheikh Hasina) கட்சியினரால் வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் (India) தஞ்சமடைந்துள்ளார்.
இந்தநிலையில், அங்கு நடந்து வரும் முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசுக்கு எதிராக இன்று (11) தலைநகர் டாக்காவில் போராட்டம் நடத்த முயன்ற ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரை இராணுவனத்தினர் கைது செய்தனர்.
பாரிய போராட்டம்
இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதோடு, பாரிய போராட்டம் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஷேக் ஹசீனா மற்றும் தப்பியோடிய பிற நபர்களை நாட்டிற்கு கொண்டு வர இன்டர்போலின் உதவியை நாடப்போவதாக வங்காளதேச (Bangladesh) இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.