;
Athirady Tamil News

ஆம்ஸ்டர்டாம் வன்முறை எதிரொலி… 4000 பொலிசாரை களமிறக்கும் பிரான்ஸ்

0

பிரான்ஸ்-இஸ்ரேல் கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 4,000 பொலிசார் மற்றும் 1,600 மைதான ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பாரிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாரிஸில் நடக்கும்

ஆம்ஸ்டர்டாமில் இஸ்ரேலிய ரசிகர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு பிரான்ஸ் நிர்வாகம் இந்த நடவடிக்கை முன்னெடுக்க உள்ளது.

வியாழன் அன்று நடைபெறும் UEFA நேஷன்ஸ் லீக் போட்டியில் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தைக் காண ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் ஆர்வம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் உள்ள குடிமக்கள் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை, குறிப்பாக பாரிஸில் நடக்கும் போட்டிகளைத் தவிர்க்குமாறு எச்சரித்தது.

மட்டுமின்றி, ஆர்ப்பாட்டங்கள் என்ற போலிக்காரணத்தின் கீழ் வன்முறை தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் கவனமாக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த போட்டியானது எங்களுக்கு அதிக ஆபத்துள்ள நிகழ்வாக மாற்றும் சூழல், பதட்டங்கள் உள்ளதாக பாரிஸ் காவல்துறைத் தலைவர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில்

ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தைச் சுற்றி 2,500 பொலிசார் நிறுத்தப்படுவார்கள் என்று நுனெஸ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஆம்ஸ்டர்டாமில் கால்பந்து விளையாட்டின் பின்னர் இஸ்ரேலிய ரசிகர்கள் இளைஞர்கள் கூட்டத்தால் தாக்கப்பட்டனர்.

யூத மக்களை குறிவைக்க சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்ட அழைப்புகள் மூலமாகவே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பேர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகு டசின் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆட்டத்திற்கு முன், இஸ்ரேலிய அணியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் மைதானத்திற்குச் செல்லும் போது, ​​அரேபிய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.