;
Athirady Tamil News

யாழில் தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய அநுர

0

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரதேசத்திற்கு பிரச்சாரத்திற்கு ரணில் மற்றும் சஜித் யாழ்ப்பாணம் வந்தார்களா? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண (Jaffna) பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று (10.11.2024) மாலை உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்றிணையுமாறு கோரிக்கை
மேலும் தெரிவிக்கையில், பழைய அரசியல் கலாசாரங்களை மாற்றி, வடக்கு மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து இனங்களும் ஒரே கொடியின் கீழ் நல்லிணக்கத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என்றும் அநுர குமார வலியுறுத்தினார்.

அநுர குமார திசாநாயக்க

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் வந்தாரா? முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்தாரா? நாம் வந்தோம்.

தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை. யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 27,000 வாக்குகள் கிடைத்து. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறியது.

மக்களை ஒன்றிணைக்கவில்லை
ஆனாலும் அது எமக்கு மிகப்பெரியது. எமது செய்தி தமிழ் மக்களிடம் செல்லவில்லை. தெற்கில் நாம் வேலை செய்தளவுக்கு வடக்கில் வேலை செய்யவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் உள்ள கட்சிகளின் தயவுடன் ஏனைய கட்சிகள் வடக்குக்கு வந்தது. அவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களையே ஒன்றிணைத்தார்கள்.மக்களை ஒன்றிணைக்கவில்லை.

தேசிய மக்கள் சக்தியில் நாங்கள் வடக்கில் தலைவர்களுடன் பேசியதுடன் மக்களுடன் இணைந்து அரசியல் செய்கிறோம். தெற்கிற்கு எதிராக வடக்கிலும் வடக்கிற்கு எதிராக தெற்கிலும் செயற்பட்டு எவ்வாறு ஒற்றுமையை காட்டுவது.

நாம் ஒரு அரசியல் கட்சியின் கீழ் ஒன்றிணைய தயார் என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது. நான் சொல்லும் விடயங்கள் உங்களுக்கு தேவை இல்லையா? தேவை தானே! பழைய அரசியலை கைவிடுவோம்.

புதிய அரசியலுக்கு வருவோம். சிங்கள தமிழ் முஸ்லிம் பேதமின்றி பிரியாது சண்டை பிடிக்காது வாழ்வோம். அது தோல்வியடைந்த பழைய அரசியல். நவம்பர் 14 ம் திகதி நாம் பங்களித்து சக்தி வாய்ந்தத அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.