;
Athirady Tamil News

வாக்களிக்க விடுமுறை வழங்குவது கட்டாயம்

0

அரச மற்றும் தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிப்பதற்கு போதுமான காலவகாசம் வழங்க வேண்டும். தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் விடுமுறை வழங்கும் முறைமையை அறிவித்துள்ளோம். தொழில் வழங்குனர்கள் தமது ஊழியர்கள் வாக்களிக்க செல்வதற்கு கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தல் வாக்களிப்புக்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன. தேர்தல் பிரச்சாரங்களுக்காக போதுமான காலவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் எதிர்வரும் வியாழக்கிழமை பொதுத்தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் தினம் வரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியாது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் இதர பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் அகற்றப்பட வேண்டும். தேர்தல் தொகுதிகளில் ஒரு மத்திய காரியாலயங்கள் மாத்திரம் இருக்க முடியும்.

இருப்பினும் இந்த அலுவலகம் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களையும், குறித்த வேட்பாளரையும் ஊக்குவிக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட முடியாது. போட்டியிடும் வேட்பாளர் தமது வீட்டை தேர்தல் பணிகளுக்கான அலுவலகமாக பயன்படுத்த முடியும்.

ஆனால் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. அத்துடன் வேட்பாளரின் வீட்டில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் வாக்களிப்பு மத்திய நிலையம் காணப்படுமாயின் வாக்களிப்பு தினத்தன்று (14) வேட்பாளரின் வீட்டின் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் அகற்றப்பட வேண்டும்.

அரச சேவையாளர்கள் வாக்களிப்பதற்கு தாபன விதிக்கோவைக்கமைய போதுமான விடுமுறை வழங்க வேண்டும். அத்துடன் தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்க வேண்டியது தொழில் மற்றும் சேவை வழங்குநரின் பொறுப்பாகும்.

இதற்கமைய வாக்களிப்பதற்கு 40 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியவர்களுக்கு 1/ நாள் 2 விடுமுறையும், 40 முதல் 100 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியவர்களுக்கு 1 நாள் விடுமுறையும், 100 முதல் 150 கிலோமீற்றர் பயணிக்க வேண்டியவர்களுக்கு 1.1/ 2 விடுமுறையும், 150 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணிக்க வேண்டிவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

தேர்தலில் வாக்களிக்க இடையூறு விளைவிக்காத வகையில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.

ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய தொழில் வழங்குனர்கள் தமது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.