;
Athirady Tamil News

2மாத குழந்தையை தூக்கி வீசிய சுன்னாகம் காவல்துறை…! அநுரவிடம் பறந்த கோரிக்கை

0

சுன்னாகத்தில் (Chunnakam) கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காவல்துறையினரின் அராஜக செயற்பாட்டிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayake) அரசாங்கம் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சுன்னாகம் காவல்துறையினர் சிறு குழந்தையை தூக்கி வீசி தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

ஊழலை ஒழிக்கிறேன் எனக் கூறும் இந்த அரசு நிச்சயமாக இதற்கு பதில் கூற வேண்டும். ஊழலை இல்லாமல் ஆக்க வேண்டுமானால் அதிகார துஸ்பிரயோகம் இடம்பெறக்கூடாது.

அதிகார அதிகார துஸ்பிரயோகம்
யாழில் (Jaffna) நடக்கும் சகல அதிகார அதிகார துஸ்பிரயோகத்திற்கும் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

சுன்னாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அராஜகம் தொடர்பில் எடுத்த நடவடிக்கையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். யாழ் மாவட்ட குடிமகனாக நான் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.

ஊழல் அற்ற அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க நாமும் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னர் காவல்துறையினரின் அதிகார துஸ்பிரயோக செயற்பாட்டிற்கு நடவடிக்கை எடுங்கள் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.