;
Athirady Tamil News

ஈரான் அணுசக்தி நிலையங்கள் குறி வைக்கும் இஸ்ரேல்

0

இஸ்ரேல் (Israel) பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஈரான் (Iran) இடையே பதற்றமான சூழல் நிலவி வருவது உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பாதுகாப்புத் துறை
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இஸ்ரேல் காட்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆரம்பத்திலேயே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவத்தின் உயர் அதிகாரிளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில் “இன்று எனது முதல் சந்திப்பில் இராணுவ ஜெனரல் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன்.

அணுசக்தி நிலையங்கள்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஆபத்தில் இருக்கிறது. இதன் மூலம் எங்களின் மிக முக்கியமான இலக்கை, அதாவது இஸ்ரேல் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை அகற்றும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ஈரான் இப்போது வரை ஒரு அணு ஆயுத நாடு இல்லை.ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இருப்பினும், ஈரான் இதைத் தொடர்ந்து மறுத்தே வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.