இளவரசி கேட்டுக்கு புற்றுநோயே இல்லை என சமூக ஊடகங்களில் பரவும் தகவலால் பரபரப்பு
பிரித்தானிய இளவரசி கேட், புற்றுநோய் தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அவருக்கு புற்றுநோயே இல்லை என சமூக ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் விமர்சித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய செய்தி
பிரித்தானிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
ஆனால், அதற்குப் பின் அவரைக் குறித்து எந்த செய்தியும் வெளியாகாததால், அவருக்கு என்ன ஆயிற்று என உண்மையாகவே அக்கறையுடன் ஒரு கூட்டமும், ஆர்வத்துடன் ஒரு கூட்டமும் யோசிக்கத் துவங்க, அவரைக் குறித்த வதந்திகள் பரவத்துவங்கின.
அவர் இறந்துவிட்டார், வில்லியமைப் பிரிந்துவிட்டார் என்றெல்லாம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், ஊடகங்கள் எழுதவும், கேலி பேசவும் செய்தன.
இந்நிலையில், தனக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதாகவும், தான் அதற்கான சிகிச்சையிலிருப்பதாகவும் இளவரசி கேட் தெரிவித்த விடயம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
I don't know if she had cancer or pre cancer cells.
But either way…I've been attacked in the most vicious way.
Just because I asked why she looked aged. Just THATFCK MY LIFE. https://t.co/EqBMGmumdM
— Narinder Kaur (@narindertweets) November 10, 2024
இளவரசி கேட்டுக்கு புற்றுநோயே இல்லை என தகவல்
இந்நிலையில், மீண்டும் இளவரசி கேட் தொடர்பில் ஊடகவியலாளர்கள் விமர்சித்துள்ள ஒரு விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய வர்ணனையாளரான நரீந்தர் கௌர் என்பவர், சமூக ஊடகமான எக்ஸில், இளவரசி கேட் தொடர்பில் சில செய்திகளை வெளியிட்டுள்ளார்.
அவற்றில் ஒன்றில், இளவரசி கேட் ஏன் வயதானது போலகாணப்படுகிறார் என தான் கேட்டதால், தான் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் இருந்ததா அல்லது, அவர் உடலில் புற்றுநோய்க்கு முந்தைய செல்கள் கண்டுபிடிக்கப்பட்டனவா என்பது எனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார் கௌர்.
Rhiannon Mills என்னும் ஸ்கை நியூஸ் சேனல் ஊடகவியலாளரும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். தற்போது கௌரும் இதே விடயத்தை மீண்டும் வெளியிட, இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் தாக்கவே இல்லையா என்னும் ரீதியில் மக்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.
Do you mean 'your' ? Just admit that you bullied a woman recovering from cancer for LOOKING HER AGE and let it go. You absolute clown! 🤡🤡🤡
— Julie Burchill (@BoozeAndFagz) November 10, 2024
அதே நேரத்தில் இளவரசியைக் குறித்து Rhiannon Mills தெரிவித்த கருத்துக்கு கண்டனங்களும் குவிகின்றன.