;
Athirady Tamil News

ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம்!

0

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 46.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 3 மணி நிலரப்படி 59.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட 3 மணி நிலவரப்படி..

அதிகபட்சமாக செரைகெல்ல-கர்சவானில் 66.38 சதவீதமாகவும், லோஹர்டாகா மற்றும் சிம்டேகாவில் 65.99 மற்றும் 64.31 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

மாநில தலைநகர் ராஞ்சியில் குறைந்தபட்சமாக 53.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கடுத்தப்படியாக பாலமு மாவட்டத்தில் 56.57 சதவீதமாக உள்ளது.

ராம்கரில் 59.22 ஆகவும, குந்தியில் 63.35, கும்லாவில் 64.59, மேற்கு சிங்பூமில் 60.35 ஆகவும் பதிவாகியுள்ளது.

இன்று காலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பர்ஹைட் தொகுதி வேட்பாளருமான ஹேமந்த சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் ராஞ்சியில் உள்ள வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.