வெள்ளத்துள் மூழ்கிய மூதூர் கட்டைபறிச்சான் பாலம்
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூதூர் கட்டைபறிச்சான் இறால் பாலம் தாழிறங்கி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த பாலத்தில் ஊடாகவே பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உட்பட பலரும் பிரயாணங்களை மேற்கொண்டு வருகின்றனர். 20க்கு மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக இந்த பாலத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.
அதேவேளை நாளை (14) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் இப்பாலத்தின் ஊடாகவே செல்லவேண்டியுள்ளது. இதனால் தேர்தலில் வாக்களிக்க இயலாமல் கூட போகலாம் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாலத்தில் வெள்ள நீர் அதிகரித்துள்ளதனால் ஆபத்தான நிலையில் பொது மக்கள் இந்த பாலத்தினூடாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடையாளம் காண முடியாதபடி பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதனால், போக்குவரத்துக்கு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.