;
Athirady Tamil News

சோப்பை ஏன் மாற்றினாய்? அடுக்கடுக்காக கேள்வி கேட்பதால் விவாகரத்து கோரும் மனைவி

0

கணவர் அடுக்கடுக்காக கேள்வி கேட்பதால் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக மனைவி தெரிவித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

விவாகரத்து சம்பவம்

தற்போதைய காலத்தில் விவாகரத்து என்பது பரவலாக நடைபெற்று வருகிறது. தம்பதிகளிடத்தில் சகிப்புத்தன்மை, விட்டு கொடுக்கும் மனப்பான்மை மெதுவாக குறைந்து வருகிறது.

இதனால், கணவன் மற்றும் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு கடைசியில் விவாகரத்தில் வந்து நிற்கிறது.

இந்நிலையில், 25 ஆண்டுகளாக உடன் இருந்த கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக ரெட்டிட் தளத்தில் பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அவருடைய கணவர் அதிகமாக கேள்வி கேட்கிறார் என்ற காரணத்தை கூறி இந்த முடிவை எடுத்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

அதாவது, வழக்கமாக பயன்படுத்தும் சோப்புக்கு பதிலாக மற்றொரு சோப்பை உபயோகப்படுத்தினால் கூட, “ஏன் மாற்றினாய்? என்று கேள்வி கேட்கிறார். இதனை தேர்ந்தெடுப்பதற்கு என்ன காரணம்?

இத்தனை சோப்புகள் இருக்கையில் இதனை ஏன் தேர்ந்தெடுத்தாய்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறார். இதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.