;
Athirady Tamil News

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று…!

0

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று (14) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இவ்வருட தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு அனைத்தும் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் 8500 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகும்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

அத்தோடு, 5006 அரசியல் கட்சிகளும் 3346 சுயேட்சைக் குழுக்களும் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வந்துள்ளன.

தேர்தல் முடிவுகள்
இந்த நிலையில், வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குப்பெட்டிகள் பெறப்பட்ட பின்னர் இரவு 7.15 மணிக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், பொதுத் தேர்தல் செயலகத்தால் தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்டங்களின் முடிவுகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்பதால் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

வாக்களிப்பு
அத்தோடு, வாக்காளர் அட்டை பெறப்படாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, வாக்களிப்பதற்காக, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், பொது சேவை ஓய்வு பெற்ற அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் மற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.