;
Athirady Tamil News

களம் சாதகமாகவுள்ளது! வாக்கைசெல்லுத்தியபின் மஸ்தான்!

0

வன்னியில் எமக்கான களம் சாதகமாக உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார்.

2024பொத்துத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.

அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை இன்று பதிவுசெய்திருந்தார்.

அதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

இனமத பேதமின்றி வன்னியில் அனைத்து மக்களிடமும் எமக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது.அபிவிருத்திக்குழு தலைவராக இருந்து பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் எமது மக்களுக்காக உண்மையாகசெயற்பட்டிருந்தோம்.

அந்தவகையில் நாங்கள் இந்த மாவட்டத்தில் அதிக இடங்களை வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் இலங்கை தொழிலாளர் கட்சியின் கங்காரு சின்னத்திற்கு வாக்களித்து எம்மை அமோக வெற்றிபெறச்செய்யவேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.