கனடாவில் வாழும் கனேடியர்களை நாட்டைவிட்டு வெளியேற சொன்ன காலிஸ்தானியர்கள்!
கனடாவில் வாழும் மக்களை பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுக்கு திருப்பி செல்லுங்கள் என்று காலிஸ்தானியர்கள் கூறிய சம்பவம் கனடா நாட்டில் அரங்கேறியது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், “இது கனடா, எங்களின் சொந்த நாடு. நீங்கள் (கனடியரகள்) திரும்பி செல்லுங்கள்.”
“வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும். இது நம் நாடு சைமன் திரும்பி போ. நாங்கள் தான் இந்த நாட்டின் உரிமையாளர்,” என பேசியுள்ளார். இவர் பேசும் போதே அங்கிருந்த சிலர் கத்தினர்.
கனடாவில் காலிஸ்தானி இயக்கத்தின் மையமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் நடந்த காலிஸ்தானி நிகழ்வில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முதன்முறையாக, கனடாவில் காலிஸ்தானிக்கு ஆதரவான கூறுகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
மேலும், இவர்கள் “ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று வலியுறுத்தி இருந்தார். ஒட்டாவாவில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது அவர் கருத்து தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கை அடங்கிய வெளியாகியுள்ளது.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பின்னணியில், இந்தியா மற்றும் கனடா உயர் அதிகாரிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்துள்ளன.