;
Athirady Tamil News

வன்னியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

0

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வன்னித் தேர்தல் தொகுதியில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குளை ரிசாத் பதியுதீன் அவர்களும், குறைந்த விருப்பு வாக்குகளை செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக 21,018 விருப்பு வாக்கு

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரிசாத் பதியுதீன் அதிகபட்சமாக 21,018 விருப்பு வாக்குளைப் பெற்றுள்ளார்.

குறைந்த விருப்பு வாக்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட செல்வம் அடைக்கலநாதன் 5,695 விருப்பு வாக்குளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மேலும், இலங்கை தொழிலாளர் கட்சியில் காதர் மஸ்தான் 13,511 விருப்பு வாக்குகளையும், இலங்கை தமிழரசுக் கட்சியில் து.ரவிகரன் 11,215 விருப்பு வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியில் செ.திலகநாதன் 10,652 விரும்பு வாக்குகளையும், ம.ஜெகதீஸ்வரன் 9,280 விருப்பு வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.