;
Athirady Tamil News

நாடாளுமன்றத்தில் எம்.பி. நடனம்: வைரல் காணொளி

0

நியூசிலாந்தில் (New Zealand) மவோரி பழங்குடி மக்களுக்கு எதிரான சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இனத்தைச் சேர்ந்த உறுப்பினரான ஹானா ரவ்ஹிடி (Hana-Rawhiti Maipi-Clarke) ஆக்ரோஷமாக பழங்குடியின பாடலை பாடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரவாகி வருகிறது.

நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அந்த தேர்தலில் மவோரி பழங்குடியின மக்களின் நியூசிலாந்து டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இளம் வயது உறுப்பினர்
அவர்களில் 21 வயதான ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க்கும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 250 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் நியூசிலாந்தின் மிக இளம் வயது உறுப்பினர் என்ற பெருமையை பெற்றவர் தான் ஹானா.

நியூசிலாந்து நாட்டில் மவோரி பழங்குடியின மக்களுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையே 1840 இல் பாரம்பரிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வைதாங்கி ஒப்பந்தம் என அழைக்கப்படும் அது பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும் மவோரி பழங்குடியின தலைவர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

சலுகை உரிமை
அதில் மாவோரி பழங்குடி மக்களுக்கு சலுகைகள் உரிமைகள் வழங்க வகை செய்யப்பட்டிருந்தது, இந்நிலையில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு டி பாடி மாவோரி கட்சி உறுப்பினரான ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பான விவாதத்தின் போது இளம் உறுப்பினரான ஹானா ரவ்ஹிடி தங்களது போர் பாடலை ஆக்ரோசத்துடன் பாடி மசோதா நகலை கிழித்து எறிந்தார்.

காணொளி
தொடர்ந்து அவருடன் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு தங்களது போர் பாடலை பாடியுள்ளனர்.

அவர்களது பாடலும் ஆக்ரோஷம் நிறைந்த முகமும் அந்த நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது இது தொடர்பான காணொளி சமூக வளைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.