ஹரிணி அமரசூரியவின் சாதனையை முறியடித்த விஜித ஹேரத்! யாருக்கு பிரதமர் பதவி?
இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் விஜித ஹேரத் கம்பஹா மாவட்டத்தில் 716,715 வாக்குகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் பெற்ற 655,289 வாக்குகளை விட ஒரு நாடாளுமன்ற வேட்பாளரின் அதிகபட்ச வாக்குகளை முறியடித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவி யாருக்கு கிடைக்க போவது என்பது தெரியவில்லை.