;
Athirady Tamil News

சாலையோரம் கிடந்த சூட்கேசுக்குள் இளம்பெண்ணின் உயிரற்ற உடல்

0

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், ஆட்கள் நடமாடும் இடத்தில், சாலையோரமாக கிடந்த சூட்கேஸ் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சூட்கேசுக்குள் இளம்பெண்ணின் உயிரற்ற உடல்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், டெல்லி லக்னோ நெடுஞ்சாலையில், சூட்கேஸ் ஒன்று கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் வந்து அந்த சூட்கேசைத் திறந்தபோது, சூட்கேசுக்குள், சுமார் 20 முதல் 30 வயதுள்ள இளம்பெண் ஒருவரின் உடல் இருப்பது தெரியவந்துள்ளது.

உடல் முழுவதும் காயங்களுடன் காணப்பட்ட அந்த பெண், குறைந்தது ஒருநாள் முன்பு உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் பொலிசாரும், தடயவியல் நிபுணர்களும் இறங்கியுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.