;
Athirady Tamil News

“தனிப்படை கைது செய்யும் அளவுக்கு என்ன தவறு செய்தார்?” – நடிகை கஸ்தூரிக்கு சீமான் ஆதரவு!

0

நடிகை கஸ்தூரி கைது பழிவாங்கும் நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் அண்ணக்குடம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடிகை கஸ்தூரியை தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு என்ன தவறு செய்தார்? மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் போது கஸ்தூரியை மட்டும் தனிப்படை அமைத்து கைது செய்தது உள்நோக்கம் கொண்டது. இது பழிவாங்கும் நடவடிக்கை” எனக் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, மணிப்பூர் கலவரம் குறித்து கேட்ட போது, “கலவரத்திற்கு காரணமானவர்களே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கலவரத்தை எப்படி தடுப்பார்கள்” எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து நடிகை கஸ்தூரி நேற்று ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த கஸ்தூரியை நேற்றிரவு ஐதராபாத்தில் கைது செய்த தனிப்படையினர், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அதன்படி, கஸ்தூரி நவம்பர் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.