தேர்வில் தோல்வி.,ஆத்திரமடைந்த முன்னாள் மாணவர் நடத்திய கத்திக்குத்து! 8 பேர் உயிரிழப்பு
சீனாவில் முன்னாள் மாணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மாணவரின் வெறிச் செயல்
கிழக்கு சீனாவில் கல்வி வளாகம் ஒன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் சனிக்கிழமை மாலை கிழக்கு சீனாவின் ஜியாங்சு(Jiangsu) மாகாணத்தின் யிக்சிங்(Yixing) பகுதியில் அமைந்துள்ள Wuxi கலை மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் அரங்கேறியுள்ளது.
கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 21 வயது முன்னாள் மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட இளைஞர்
தாக்குதல்தாரி தனது பட்டப்படிப்பை இந்த ஆண்டு நிறைவு செய்ய இருந்த நிலையில், தேர்வில் தோல்வியை சந்தித்ததை அடுத்து ஆத்திரமடைந்த இளைஞர் கொலைவெறி தாக்குதலில் இறங்கியுள்ளான் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் வழங்கிய தகவலின் படி, கைது செய்யப்பட்ட இளைஞர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு வந்த அவசர சேவைகள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கினர்.