;
Athirady Tamil News

400 கடந்த இறப்பு எண்ணிக்கை… நொறுங்கிப் பரிதவிக்கும் ஆசிய நாடொன்று

0

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு 400க்கும் மேற்பட்டோர் இதுவரை மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 78,595 நோயாளிகள்

வெப்பநிலை அதிகரிப்பு, நீண்ட மழைக்காலம் ஆகியவை தொற்றுநோய் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலையில் சமாளிக்க முடியாமல் திணறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024ல் மட்டும் டெங்கு உள்ளிட்ட சிக்கல்களால் குறைந்தது 407 பேர் மரணமடைந்துள்ளனர். சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 78,595 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் நடுப்பகுதியில், 4,173 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர், அவர்களில் 1,835 பேர் தலைநகரான டாக்காவிலும் 2,338 பேர் பிற இடங்களிலும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நகரங்களில் நெரிசலான மக்கள்தொகை நோய் பரவுவதை அதிகப்படுத்துகிறது, பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலங்களில் இது மிகவும் பொதுவானது என்றே கூறுகின்றனர்.

கடுமையான நடவடிக்கை

வெப்பநிலை அதிகரிப்பு, நீண்ட பருவமழை, இவை இரண்டும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை, கொசு இனப்பெருக்கத்தில் ஒரு பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு டெங்குவால் 1,705 இறப்புகள் மற்றும் 321,000 க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு என மிக மோசமான நிலையை பதிவு செய்திருந்தது.

இதனிடையே, கொசு விரட்டிகள் மற்றும் கொசு வலைகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், கொசுக்கள் பெருகும் இடத்தில் தேங்கி நிற்கும் நீரை அகற்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டெங்கு நோய் பெரும்பாலும் லேசான ஆரம்ப அறிகுறிகளை மட்டுமே காண்பிக்கும், இது நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் வரை கண்டறியப்படாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.