;
Athirady Tamil News

எச்சரிக்கை சைரன் ஒலிக்க இஸ்ரேலுக்குள் புகுந்த ஹிஸ்புல்லாக்களின் நூற்றுக்கணக்கான ரொக்கெட்டுகள்

0

எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததை தொடர்ந்து, ஹிஸ்புல்லா லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்கு சுமார் 100 ரொக்கெட்டுகளை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ரொக்கெட்டுகளில் வான் பாதுகாப்பு அமைப்பு சிலவற்றை இடைமறித்து அழித்துள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

100 ரொக்கெட்டுகள்

பிற்பகல் 3 மணி (13:00 GMT) நிலவரப்படி, ஹிஸ்புல்லா அமைப்பால் ஏவப்பட்ட சுமார் 60 ரொக்கெட்டுகள் இன்று (19) லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளன.

இதனை தொடர்ந்து, மேற்கு கலிலி பகுதியில் 15:09 மற்றும் 15:11 க்கு இடையில் ஒலித்த சைரன்களைத் தொடர்ந்து, சுமார் 40 ரொக்கெட்டுகள் லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் சென்றது அடையாளம் காணப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம்

அத்தோடு, மத்திய இஸ்ரேலில் உள்ள டெல் அவிவின் ராமத் கான் பகுதியில் உள்ள ஒரு வணிக மையத்தை ஹிஸ்புல்லாவின் ரொக்கெட்டு தாக்கியுள்ளது.

மேலும், டெல் அவிவ் நகரின் கிழக்கே உள்ள பினே பிராக் என்ற இடத்தில் ஒரு பேருந்தை ரொக்கெட் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன, அதன் காரணமாக பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தாக்குதலில் வடக்கு இஸ்ரேலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.