கலைஞர் கிரிக்கெட் 2024
யாழ் மாவட்ட இசைக்குழு கலைஞர் சங்கம் யாழ் மாவட்டத்தில் உள்ள இசைக்குழுக்களில் உள்ள கலைஞர்களை ஒன்றிணைத்து கலைஞர்களுக்கிடையில் நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட “கலைஞர் கிரிக்கெட் 2024 ” என்னும் துடுப்பாட்ட போட்டித் தொடர் ஒன்று(17.11.2024) அரியாலை காசிப்பிள்ளை அரங்க மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த போட்டித்தொடரில் கலைஞர்கள் எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன் என மூன்று அணிகளாக போட்டியிட்டனர்.
பாடகர் கோகுலன் தலைமையில் சங்கிலியன் அணியும், கீபோர்ட் வாத்தியக்கலைஞர் ஷானுவின் தலைமையில் பண்டாரவன்னியன் அணியும், இசையமைப்பாளர் சாய் தர்ஷன் தலைமையில் எல்லாளன் அணியும் போட்டியிட்டன.
தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு அணியும் எதிரணி ஒவ்வொன்றுடனும் இரண்டு தடவை போட்டியிட்டு புள்ளிகளின் அடிப்படையில் சங்கிலியன் பண்டாரவன்னியன் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியிருந்தன. குறித்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று “கலைஞர் கிரிக்கெட்2024” வெற்றி அணியாக கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக ஒக்டபாட் ஆனந், தொடர் நாயகனாக தபேலா பிரசாத், தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக பாடகர் மதி, தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக பாடகர் சபேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு விருதுகளையும் பெற்றனர்.
2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு மூத்த கலைஞர்களின் வரலாறு அடங்கிய நூல் வெளியீடு மற்றும் கோவிட்19 காலத்தில் கலைஞர்களுக்கான நிவாரண உதவிகளையும் செய்திருந்தது. சங்கத்தின் செயல்பாடுகளின் முதலாவது கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிரிக்கெட் தொடரில் கலைஞர்கள் ஆர்வத்துடன் ஒற்றுமையாக விளையாடியதையும் காணக்கூடியதாக இருந்தது.