;
Athirady Tamil News

புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்; விபரம் உள்ளே!

0

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் அமைக்கபப்ட்டுள்ளது. அந்தவகையில் நேற்றியதினம் அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிய செயலாளர்கள் விபரங்கள்

  •  ஜி.பி.சபுதந்திரி – பிரதமரின் செயலாளர்
  •  டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர்
  • சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு
  • கே. எம். எம் சிறிவர்தன – நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
  • ஜே. எம் திலகா ஜயசுந்தர – ​​கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு
  • ஏ. எம். பி. எம். பி அத்தபத்து – புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு
  •  பி. கே பிரபாத் சந்திரகீர்த்தி – தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு
  • எச். எஸ்.எஸ்.துய்யகொன்னா – பாதுகாப்பு அமைச்சு
  •  டி. டபிள்யூ. ஆர். பி செனவிரத்ன – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு
  •  யூ. ஜி ரஞ்சித் ஆரியரத்ன – நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு
  • பேராசிரியர் கே.டி. எம். உதயங்க ஹேமபால – எரிசக்தி அமைச்சு
  •  எஸ். ஆலோக பண்டார – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
  • எஸ். எம் பியதிஸ்ஸ – தொழிலாளர் அமைச்சு
  • ஏ. விமலேந்திரராஜா – வர்த்தகம், வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
  •  டி. பி. விக்கிரமசிங்க – விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
  •  கே. எம். ஜி. எஸ். என் களுவெவ – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
  •  ஏ. எச். எம். யு அருண பண்டார – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு
  • அருணி ரணராஜா – வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை
You might also like

Leave A Reply

Your email address will not be published.