;
Athirady Tamil News

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

0

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் களனி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம்
இலங்கை பொலிஸின் ஆட்சேர்ப்பு முறையை மேம்படுத்தி பொலிஸாருக்கு தேவையான ஆள்பலத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (19) கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் கீழ்நிலையில் உள்ள உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பொலிஸாரிடம் செல்லும் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“சட்டத்தை மதிக்கும் பொலிஸ் மற்றும் ஒழுக்கமான பொலிஸை உருவாக்க வேண்டும், அது இல்லாமல், நீதியான மற்றும் நியாயமான சமுதாயத்தை உருவாக்குவது கடினம். ஆட்சேர்ப்பில் பல சிக்கல்கள் உள்ளன.

அவற்றை மறுபரிசீலனை செய்த பிறகு, ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும். பின்னர் பொலிஸுக்கு தேவையான ஆள்பலத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அது இல்லாமல் குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகச் செயற்பாடுகள் போன்றவற்றை அடக்க முடியாது.

மேலும் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பாதுகாப்பு படைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களும் பொலிஸாரின் ஆள்பலத்தை பலப்படுத்த பயன்படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.