சவுதி அரேபியாவில் 101 வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை: சர்வதேச கண்டனங்கள்
சவுதி அரேபியாவில் 2024ம் ஆண்டில் இத்வரை 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
2024 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதிக்குள் சவுதி அரேபியா கிட்டத்தட்ட 274 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
இதில் 101 பேர் வெளிநாட்டவர்கள் என்பதுடன் இது கடந்த ஆண்டுகளை விட கணிசமான அதிகரிப்பைக் குறிக்கிறது.
மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் பாகிஸ்தான், யெமன், சிரியா, நைஜீரியா, எகிப்து, ஜோர்டான், எத்தியோப்பியா, சூடான், இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கண்டனம்
குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு எதிரான மரண தண்டனைகளின் இந்த அதிகரிப்பு சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ளது.
ஐரோப்பிய-சவுதி மனித உரிமைகள் அமைப்பு (ESOHR) இந்த ஆண்டின் மரண தண்டனை எண்ணிக்கை ஒரு முன்னோடியில்லாதது என்று சுட்டிக்காட்டியுள்ளது..
சவுதி அதிகாரிகள் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களை குறிப்பிட்டு இந்த கடுமையான தண்டனைகளை நியாயப்படுத்துகின்றனர்.
மேலும் உலகளாவிய கண்டனங்களுக்கிடையே, சவுதி அரேபியா, ஷரியா சட்டத்தை பின்பற்றுவது மற்றும் பொது ஒழுங்கை பராமரிப்பதற்கான அவசியத்தைக் கூறி, மரண தண்டனையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.