கிரீசின் கோல்டன் விசா திட்டத்தில் புதிய மாற்றங்கள்., 2025 முதல் அமுல்
கிரீஸ் (Greece) தனது 11 வருட பழமையான கோல்டன் விசா திட்டத்தில் மேலும் மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.
2013-ல் தொடங்கிய இந்த திட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் பொருளாதார முன்னேற்றத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்டது.
கடந்த செப்டம்பரில் குறைந்தபட்ச முதலீட்டை மூன்று மடங்கு உயர்த்திய பிறகு, இந்த திட்டத்தின் தகுதிச்சார்ந்த விதிமுறைகளை அதிகரிக்க புதிய மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இந்த புதிய விதிமுறைகள் 2025 ஜனவரி முதல் அமுலுக்கு வரும் என கூறப்படுகிறது.
புதிய விதிமுறைகள்
1- நிறுவன முதலீட்டில் உரிமை
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனத்தில் பங்கு வாங்கினால், குறைந்தது மூன்றில் ஒரு பங்கு அல்லது வாக்குரிமையை வைத்திருக்க வேண்டும்.
2- புதிய வேலை வாய்ப்புகள்
முதலீட்டின் முதல் ஆண்டுக்குள், அந்த நிறுவனம் குறைந்தது இரண்டு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
3- வேலை வாய்ப்புகளின் நீடிப்பு
இந்த வேலை வாய்ப்புகள் முதலீட்டிற்கு பிறகு குறைந்தது ஐந்து ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டும்.
கோல்டன் விசா பெற தகுதிகள்
- விண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேல் மற்றும் ஐரோப்பிய யூனியன் வெளியே வசிக்க வேண்டும்.
- தனக்கு மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு அவசியம்.
- குற்றப்பதிவில்லாத சான்றிதழ் கட்டாயம்.
கோல்டன் விசா மூலம் கிடைக்கும் நன்மைகள்
- கிரீசில் வாழ உரிமை, துணைவர் மற்றும் 21 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வசதி.
- ஷெங்கன் பகுதியில் தடையின்றி பயணிக்க முடியும்.
- இரட்டை வரி தவிர்க்கும் ஒப்பந்தங்களின் பயன்களைப் பெற முடியும்.
கிரீசின் இந்த புதிய மாற்றங்கள் முதலீட்டு திட்டத்தை மேலும் ஒழுங்கமைக்க உதவும் என்றும், பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.