லண்டனில் ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வீர வாள்!
இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வீர வாள் ஏலத்தில் ரூ.3.4 கோடிக்கு விற்கப்பட்டது.
ஸ்ரீரங்கப்பட்டினம் போர்
799-ம் ஆண்டு, மைசூர் மன்னர் திப்பு சுல்தானும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியும் மோதிக்கொண்ட ஸ்ரீரங்கப்பட்டினம் போர், இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
இந்தப் போரில் மன்னர் திப்பு சுல்தான் வீர மரணம் அடைந்தார்.
திப்பு சுல்தானின் வீரம் மற்றும் வலிமையின் அடையாளமாக, அவரது வாள் பல நூற்றாண்டுகளாக வரலாற்று ஆர்வலர்களை கவர்ந்து வருகிறது.
ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன வாள்
ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் ஆங்கிலேய படையின் கேப்டனாக இருந்த ஜேம்ஸ் ஆண்ட்ரு டிக் என்பவருக்கு திப்பு சுல்தானின் வாள் பரிசாக வழங்கப்பட்டது.
டிக் குடும்பத்தாரிடம் பல தலைமுறைகளாக இருந்த இந்த வாள், சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு ஏலத்தில் ரூ.3.4 கோடிக்கு விற்கப்பட்டது.
திப்பு சுல்தான் பயன்படுத்திய இந்த வாள், புலியின் வரி மற்றும் அரபு எழுத்தான ‘ஹா’ ஆகியவற்றால் அழகாக செதுக்கப்பட்டிருந்தது.
‘ஹா’ என்ற எழுத்து, திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியைக் குறிக்கும் சின்னம் என்று கூறப்படுகிறது.
திப்பு சுல்தானின் வாளுடன், ஸ்ரீரங்கப்பட்டினம் முற்றுகையில் பங்கேற்ற பீட்டர் செர்ரி என்பவருக்கு அளிக்கப்பட்ட வெள்ளி பதக்கமும் ஏலத்தில் விற்கப்பட்டது. இந்த பதக்கம் ரூ.24 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.