நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கடமையாற்றிய குழுக்களுக்கான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கடமையாற்றிய குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (19.11.2024) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் நீதியாகவும், சுமுகமாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், தெரிவத்தாட்சி அலுவலருக்கு பக்கபலமாகவிருந்த விடயத்திற்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் , தேர்தல் செயற்பாடுகளில் சிறப்பாக கடமையாற்றியதற்காக அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.