எந்த நாடும் தனியாக இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
போதைப்பொருள் கடத்தல் என்பது எந்தவொரு நாடும் தனித்து போராட முடியாத சர்வதேச பிரச்சனை என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மரை சந்தித்த ட்ரூடோ
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் ட்ரூடோ, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார்.
அவரது பதிவில், “ஜி20யில் நேற்றிரவு கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தது மிக அருமையான விடயம். அட்லாண்டிக் முழுவதும் அவரைப் போன்ற ஒரு வலுவான, முற்போக்கான பங்குதாரர் எங்களிடம் இருக்கிறார் என்பதை அறிவதில் மகிழ்ச்சி” என கூறினார்.
போதைப்பொருள் கடத்தல்
மேலும் அவர் போதைப்பொருள் கடத்தல் குறித்து தனது பதிவுகளில் கூறுகையில், “போதைப்பொருள் கடத்தல் என்பது எந்தவொரு நாடும் தனித்து போராட முடியாத ஒரு சர்வதேச பிரச்சனையாகும். வெளிநாடுகளில் இருந்து கனடாவிற்கு போதைப்பொருள் கடத்தும் கும்பல்களை, அவர்கள் நமது எல்லைகளை கடக்கும் முன் தடுக்க, ஜி20 கூட்டாளிகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
ஒத்துழைப்பு இல்லாமல் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது சாத்தியமற்றது. கனடா உருவாக்கியுள்ள நட்பும், உறவுகளும் இன்றியமையாதவை. மேலும், ஜி20யில் இந்த கூட்டாண்மைகளில் ஒன்றாக இணைந்து பலவற்றை சாதித்துள்ளோம்” என தெரிவித்தார்.
அத்துடன், உலகளாவிய சவால்களை தனியாக தீர்க்க முடியாது. கனடா கட்டியெழுப்பிய நட்பும், உறவுகளும் முக்கியமானவை. மேலும் ஜி20யில் பலவற்றை ஒன்றாக செய்ய அந்த கூட்டாண்மைகளில் நாங்கள் சாய்ந்தோம் எனவும் குறிப்பிட்டார்.