ரஷ்யாவின் தாக்குதலையடுத்து தூதரகத்தை மூடிய அமெரிக்கா! ஊழியர்கள் வெளியேற அறிவுறுத்தல்
ரஷ்யாவின் தாக்குதலையடுத்து தூதரகத்தை மூடிய அமெரிக்கா! ஊழியர்கள் வெளியேற அறிவுறுத்தல்
உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவின் வான் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய தாக்குதல்களுக்கு மேற்கத்திய ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுப்பதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அக்டோபர் மாதம் கூறியதைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை அன்று மேலும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.
தற்போது இரு நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவின் 6 நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யாவின் பல பகுதிகளில் உக்ரைன் தாக்கியது. அதில் 5 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அமெரிக்க வெளியுறவுத் துரையின் தூதரக விவகாரங்களின் அறிக்கையில், “உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்கள் சாத்தியமான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளுக்குத் தயாராகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மிகவும் எச்சரிக்கையுடன் தூதரகம் மூடப்படும், மேலும் தூதரக ஊழியர்கள் தங்குமிடத்திற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.