பிரித்தானியாவில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை… உணவு, தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
பிரித்தானியாவில் அதிக பனிப்பொழிவு மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து பதிப்பு ஏற்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வானிலை எச்சரிக்கை
இந்த வாரம் முழுவதும் கிழக்கு மற்றும் மேற்கு மிட்லாண்ட் பகுதிகளுக்கு வானிலை மையம் மஞ்சள் வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. மட்டுமின்றி, வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறையவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதியில் sub-zero வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், Aberdeenshire இல் உள்ள Braemar இல் மைனஸ் 11.2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மாற்றம் காரணமாக வெளியே செல்வதை கடினமாக்கும் முன் மக்கள் பால், பாண் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பால், பாண், முட்டை உள்ளிட்டப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும் சூழலும் உருவாகலாம் என கூறுகின்றனர். பல்பொருள் அங்காடிகளில் இருந்து நொறுக்குத் தீனிகள், ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளும் மக்கள் வாங்கிக் குவிக்கலாம்.
2018ல் இது போன்றதொரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டதாக கூறுகின்றனர். செவ்வாய்க்கிழமை, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தாமதத்தை எதிர்கொண்டனர். 200க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன.
போக்குவரத்து பாதிக்கப்படும்
தற்போது மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் எச்சரிக்கைகளுக்கான கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் வானிலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் சில பிரதானசாலைகளில் 10-15 செ.மீ பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால் தேசிய பிரதானசாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மதியம் முழுவதும் குளிர்ந்த காலநிலை வடக்கு ரெயிலின் பல்வேறு சேவைகளை பாதிக்கும் என்று தேசிய ரெயில் எச்சரிக்கை விடுத்துள்ளது.