வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வலிகாமம் கிழக்கு பண்பாட்டு பெருவிழா இன்று முன்னெடுக்கப்பட்டது.
பண்பாட்டு, கலை கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததிகளுக்கு கடத்த வேண்டியது அவசியமாகும். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
எமது கலைகள் பண்பாடுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளதா என்று எண்ணாது அதனை அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதன் போது கலைக்குரிசில் வடிவேலு பாலசந்திரன் இளங்கலைஞர் விருது மற்றும் மூத்த கலைஞர் விருது என்பனவும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் லாகினி நிருபராஜ், கோப்பாய் பிரதேச செயலாளர், ச.சிவஸ்ரீ, சோமாஸ்கந்த கல்லூரியின் முதல்வர் சி.திரிகரன், பாடசாலை மாணவர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இயல் இசை நாடக கலை நிகழ்வுகள் பல நடைபெற்றன.