;
Athirady Tamil News

ரொறன்ரோவில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

0

ரொறன்ரோவில் சிறுவர் வறுமை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் சிறுவர் வறுமை அதிகமாக காணப்படும் நகரமாக டொரன்டோ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபைட்டிங் ஃபார் அவர் ஃப்யூச்சர் சயில்ட் அன்ட் ஃபேமிலி ரிப்போர்ட் கார்ட் டொரன்டோ 2024 ( Fighting for Our Future: Child and Family Report Card, Toronto 2024) என்ற அமைப்பினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் வறுமை நிலை 3.8 வீதத்தினால் உயர்வடைந்து, 20.6 வீதமாக அதிகரித்துள்ளது.

இது ஓர் ஆண்டில் பதிவான அதிக அளவான வறுமை நிலை என்பது குறிப்பிடத்தக்கது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

மொத்தமாக சிறுவர் வறுமையானது 25.3 வீதமாக உயர்வடைந்துள்ளது.

சிறுவர் வறுமை என்பது சிறுவர்களை கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கி வரும் வறுமையை குறிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.