*கலாசாலையில் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு*
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 20.11.2024 புதன்கிழமை ஒன்றுகூடலானது நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வாக இடம்பெற்றது.
யாழ். நீரிழிவுக்கழகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு நோய் வைத்திய நிபுணர் டாக்டர். ம . அரவிந்தன் அதிதி பேச்சாளராக கலந்து கொண்டார்.
நீரிழிவு கழகம் பற்றிய அறிமுக உரையை கழகத்தின் செயலாளர் க. கணபதி ஆற்றினார்.
கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதலாம் வருட ஆரம்பப்பிரிவு ஆசிரிய மாணவன் திரு. நா. இராசநாதன் நிகழ்வுகளை முன்னிலைப் படுத்தினார்.
ஆரம்பப்பிரிவு ஆசிரிய மாணவி திருமதி. ர. தேவமணி “நோயற்ற வாழ்வு” எனும் பொருளில் உரை நிகழ்த்தினார்.