;
Athirady Tamil News

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

0

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, இன்று (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளனர்.

இரகசிய பொலிஸாரினால் இந்த வழக்கு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காசோலைகளை வழங்கி மோசடி
டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்நிலையில் சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் என்பவர், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து தலா பத்து மில்லியன் ரூபாய் காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக, அவருக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தவால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் முதல் சாட்சியான தேவானந்தாவுக்கு சாட்சியமளிப்பதற்கான கடைசித் திகதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஹேவாபத்திரன நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்போது இரு தரப்பையும் பரிசீலித்த மாஜிஸ்திரேட், சாட்சிக்கு பிடியாணை பிறப்பித்த நீதிபதி , விசாரணையை ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.