ஐபெக்ஸை உயர்ந்த மலை சரிவில் வேட்டையாடிய பனிச்சிறுத்தை… மெய்சிலிர்க்கும் காட்சி
பனிச்சிறுத்தை ஒன்று ஐபெக்ஸை உயர்ந்த மலை சரிவில் வேட்டையாடிய பகிர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐபெக்ஸ் என்னும் காட்டு மலை ஆடு ஒரு விசித்திரமான குணம் கொண்டவை. இவை ஆசியா மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அதிகமாக காணப்படுகின்றது.
இவை குறுகிய, பரந்த தலையை கொண்டிருக்கும். இதன் கொம்புகள் நீண்டு வளரும். இதன் ரோமம் பழுப்பு, சாம்பல் நிறத்திலும் அடி வயிறு வெள்ளையாகவும் இருக்கும்.
இதன் தனி சிறப்பு என்னவென்றால் செங்குத்தான உயரம் கொண்ட மலைகளில் ஏறும் திறன் கொண்டவை.
தன்னை மனிதர்கள் வேட்டையாமல் இருப்பதற்காக ஐபெக்ஸ் மலைகளில் ஏறி தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.
அப்படி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐபெக்ஸை பனிச்சிறுத்தை கொடூரமாக வேட்டையாடி இழுத்துச்செல்லும் மெய்சிலிர்க்கும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.