ஆசிய நாடொன்றில் பயங்கர துப்பாக்கி சூடு தாக்குதல்: 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கிட்டத்தட்ட 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு
வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் வியாழக்கிழமை ஷியா முஸ்லிம் சமுக மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் கிட்டத்தட்ட 8 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டதுடன், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
குறிவைக்கப்பட்ட வாகனம் பரசினார் பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கி கான்வாயில் சென்று கொண்டு இருந்த போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த பயங்கர தாக்குதலானது கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது, இதுவே கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் ஆகும்.
இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.