;
Athirady Tamil News

30 மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள்! திகிலூட்டும் ஆய்வு முடிவு

0

இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 மில்லயன் மக்கள் காலநிலை மாற்றத்தினால் உயிரிழக்கக்கூடும் என்று ஆய்வு கணித்துள்ளது.

பேரழிவு பாதை

இந்த நூற்றாண்டில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு சென்று பேரழிவு பாதையை அடையும் என ஐ.நாவின் அறிக்கை எச்சரித்தது.

இதனைத் தொடர்ந்து, Max Planck Institute ஆராய்ச்சியாளர்கள் காற்று மாசுபாடு, தீவிர வெப்பநிலை காரணமாக ஏற்படும் இறப்புகளை மதிப்பிடுவதற்கு மேம்பட்ட எண் உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தினர்.

இந்த பகுப்பாய்வில் காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாட்டின் காரணமாக, இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 மில்லியன் மக்கள் அழிந்து போகக்கூடும் என்று என கூறப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கணக்கீடுகளை 2000 முதல் 2090 வரையிலான கணிப்புகளின் அடிப்படையில், 10 ஆண்டு இடைவெளியில் பகுப்பாய்வு செய்தனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இறப்புகளில் குறிப்பிடத்தக்க பிராந்திய வேறுபாடுகள் இருக்கும் என்று அவர்களின் பகுப்பாய்வு காட்டுகிறது.

மோசமாக பாதிக்கப்படும்
காற்று மாசுபாடு காரணமாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மிக மோசமாக பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

ஆனால் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா பசிபிக் போன்ற அதிக வருமானம் கொண்ட பகுதிகளில், தீவிர வெப்பநிலை தொடர்பான இறப்புகள் காற்று மாசுபட்டால் ஏற்படும் இறப்புகளை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர்களின் கணிப்பின்படி, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா (போலந்து மற்றும் ருமேனியா) மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் (அர்ஜென்டினா மற்றும் சிலி) காற்று மாசுபாட்டை விட, தீவிர வெப்பநிலை மிகவும் குறிப்பிடத்தக்க சுகாதார அபாயமாக மாறுவதால், ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்.

ஆராய்ச்சி குழு தலைவர் டாக்டர் ஆண்ட்ரியா போஸர் கூறும்போது, “2000ஆம் ஆண்டில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் மக்கள் குளிர் மற்றும் வெப்பம் காரணமாக தீவிர வெப்பநிலை காரணமாக இறந்தனர்” என்றார்.

2100ஆம் ஆண்டு வாக்கில், உலக மக்கள்தொகையில் 5யில் ஒரு பகுதியினருக்கு காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையதை விட, வெப்பநிலை தொடர்பான உடல்நல அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளின் அவசரத் தேவையை கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.