சத்தீஸ்கர்: 10 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனர்.
அப்போது வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 10 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியோரின் தேடுதல் பணி தொடர்ந்து அப்பகுதியில் நடந்து வருகிறது என்று காவல் அதிகாரி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் விஷ்ணு தேவ் சாய் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையை பாராட்டியதுடன், பஸ்தர் பகுதியில் அமைதி திரும்பியுள்ளது என்று கூறியுள்ளார்.